இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீஸார் பலி

செய்திப்பிரிவு

தெற்கு காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் 6 போலீஸார் பலியாயினர்.

இதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அச்சாபால் என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலே ாசனையில் ஈடுபட்டார். இதே அனந்த்நாக் மாவட்டம், அர்வானி கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை நேற்று பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து சரணடையும்படி கேட்டனர்.

ஆனால் அவர்கள் துப்பாக்கி யால் சுட்டு தாக்குதல் நடத்தி னர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பாவின் உள்ளூர் தலைவரான ஜூனைத் மட்டூ என்பவரும், மற்றொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர்.

மட்டூவை கொன்றதற்கு பழித் தீர்க்கும் விதமாகவே, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT