இந்தியா

கொத்தடிமைகளை மீட்க வேண்டும்: மாநிலங்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

ஆர்.ஷபிமுன்னா

மாநிலங்களவையில் திமுக உறுப் பினர் கனிமொழி நேற்று பேசிய தாவது:

இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் கொத்தடிமைகளாக சித்திரவதைக்கு ஆளாகி வருகின்ற னர். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், 2030-ம் ஆண்டுக்குள் கொத்தடிமைகளின் முழுமை யான விடுதலைக்கும் மறுவாழ்வுக் கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள தாக கூறுகிறார்.

கொத்தடிமை தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இந்த 40 ஆண்டுகளில் வெறும் 2 லட்சத்து 83 ஆயிரம் கொத்தடிமைத் தொழி லாளர்கள் மட்டுமே விடுவிக்கப் பட்டுள்ளனர்.

கொத்தடிமைத் தொழிலாளர் களில் பெரும்பாலானோர் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்து சென்றவர்களாக உள்ளனர். இவர்கள் மோசடி வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க வழியே இல்லை. அரசின் எந்த உதவித் திட்டங்களும் இவர்கள் இருக்கும் திசையைக் கூட எட்டுவதில்லை.

தமிழ்நாட்டில் கூட பல மாவட்டங்களில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஜவுளித் தொழில், பண்ணைகள், சர்க்கரை ஆலைகள் என பல்வேறு தொழில்களில் ஈடு படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, ஜவுளித் தொழிலில்

‘சுமங்கலி திட்டம்’ என்ற பெயரில் இளம் பெண்கள் நல்ல வேலை, நல்ல சம்பளம் என்ற ஆசை வார்த்தை காட்டப்பட்டு சித்திரவதை செய் யப்படுகின்றனர். நாடு முழுவதிலும் கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்கவும், அவர்களுக்கு மறுவாழ் வுத் திட்டங்களை செயல்படுத்தவும் 2030-ம் ஆண்டு என்ற காலவரை யறை மிகவும் நீண்டதாக உள்ளது. அதை விடுத்து கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வும் அரசு மிக விரைவாக செயல் பட வேண்டும். இவ்வாறு கனிமொழி வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT