கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட ரூ.19 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை ஆணை யரை சிபிஐ கைது செய்துள்ளது. அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர்.
மும்பையில் வருமான வரித் துறை ஆணையராக இருப்பவர் பி.பி.ராஜேந்திர பிரசாத். இவர், வருமான வரி செலுத்துவதில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங் களுக்குச் சாதகமாகச் செயல் பட்டதாகவும், இதற்கு லஞ்சமாக லட்சக்கணக்கில் பணம் பெற்ற தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வருமான வரித்துறை ஆணையர் ராஜேந்திர பிரசாத்தை நேற்று கைது செய்தனர். மேலும், விசாகப் பட்டினம் மற்றும் மும்பையில் உள்ள அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடி கைப்பற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மும்பை வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் மீது பெரிய கார்ப் பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.19 லட்சம் லஞ்சம் பெற்றுத் தர உடந்தையாக இருந்த தாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கைதான ராஜேந்திர பிரசாத்தை விசாரணைக்காக அதிகாரிகள் மும்பை கொண்டு சென்றனர்.