இந்தியா

நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சி

பிடிஐ

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் நேற்று கூறியதாவது:

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில், வி.எச்.பி. மூத்த தலைவர் உட்பட 24 பேர் குற்றவாளிகள் என்று குஜராத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த தீர்ப்பின் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கடைசியில் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் இன்னும் தீர்ப்பின் முழு விவரத்தை படிக்கவில்லை. எனினும், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைத்துள்ள தாக நம்புகிறோம். குற்றச்சாட்டு களும், எதிர் குற்றச்சாட்டு களும் முன்வைக்கப்பட்டன. கடைசியில் நீதி கிடைத்துள்ளது. இவ்வாறு டாம் வடக்கன் கூறினார்.

SCROLL FOR NEXT