இந்தியா

சாலை விபத்துகளில் தினமும் 400 பேர் பலியாகின்றனர்: நடவடிக்கை எடுத்தும் 2 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை

பிடிஐ

‘சாலை விபத்துகள் 2015’ அறிக்கையை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் பாஜக அரசு பொறுப் பேற்ற பிறகு சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்பை குறைக் கவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக் கிறது. சாலை விபத்துகளால் தினமும் சுமார் 400 பேர் இறக்கின்ற னர். இதற்கு போக்குவரத்து விதி மீறல்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. எனினும், சாலை விபத்துகளை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். தவறான நடவடிக்கைகளால் உயிரிழப்பு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

ஒரு மணி நேரத்தில் 57 விபத்து கள் நடைபெறுகின்றன. அவற்றில் 17 பேர் சராசரியாக உயிரிழக் கின்றனர். இதில் 54 சதவீதம் பேர் 15 வயதில் இருந்து 34 வயதுக்குட் பட்டவர்கள் என்பது மிகவும், வேதனை அளிக்கிறது. இந்த விவரங்களை வெளியிடுவதால் அரசை விமர்சிக்கலாம். எனினும், பொதுமக்கள் அறிய வேண்டும் என்பதால் இதை வெளியிடுகிறேன்.

சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர் களின் தவறு 77.1 சதவீதமாக உள்ளது. அத்துடன் சாலைகள் அமைப்பும் விபத்துகளுக்கு காரண மாக உள்ளது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது முக்கியமான சாலைகளில் தரமில்லாமல் பாலங்கள், சுரங்கங் கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப் பாக டெல்லி குர்காவ்ன் சாலையில் விபத்துகள் அதிகம் நடப்பதற்கு அதுதான் காரணம்.

சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளை, 4 வழி சாலைகளாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

SCROLL FOR NEXT