எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று மெட்ரோ ரயிலில் பயணித்து அலுவலகம் சென்றார்.
தானும், தனது அமைச்சக பணியாளர்கள் அனைவரும், அக்டோபர் 9ம் தேதி (இன்று) முதல் ஒவ்வொரு புதன் கிழமையும் அலுவலகத்துக்குச் செல்ல பொது போக்குவரத்தை பயன்படுத்த இருப்பதாக கடந்த மாதம் வீரப்ப மொய்லி அறிவித்திருந்தார்.
பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை பொது மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்த பழக்கத்தை கடைபிடிப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை தனது வீட்டின் அருகே டெல்லி மெட்ரோ ரயிலில் ஏறிய மொய்லி சாஸ்த்திரி பவன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி அலுவலகத்துக்குச் சென்றார்.