சிறப்பாக பணியாற்றிய தொழிலா ளர்களுக்கு சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஸ்கூட்டர்களை பரிசாக அளித்து ஊக்குவித்துள்ளார். பொரு ளாதார சூழல் சரியில்லாத நிலை யிலும் நிறுவனத்தின் இலக்கை எட்ட உதவிய பணியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளார்.
லக்ஷிமிதாஸ் வெக்கரியா என்கிற வைர வியாபாரி ஆண்டு ஊக்கத் தொகையாக 125 பணியாளர்களுக்கு ஹோண்டா ஆக்டிவா4ஜி மாடல் ஸ்கூட்டரை அன்பளிப்பாக அளித்துள்ளார்.
ஏற்கெனவே குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாவ்ஜி தொலாகியா ஆண்டுதோறும் தனது பணியாளர்களுக்கு கார்கள், வீடுகளை அளித்து வருவது குறிப் பிடத்தக்கது. வெக்கரியா 2010ம் ஆண்டு வைர வியாபாரத்தை தொடங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக இவரது நிறுவனம் 50 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இவரிடத்தில் 5,500 பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். சூரத் நகரம், தங்க ஆபரணங்கள் உற்பத்தி செய்வது தவிர வைர கற்கள் வெட்டுதல் மற்றும் பாலிஷிங் கேந்திரமாகவும் உள்ளது. இதனால் இங்கு தொழிலை தொடங்கும் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் வெற்றி பெறுகின்றன. வைரம் மற்றும் தங்க ஆபரண நகைகள் துறை இந்திய ஜிடிபிடில் 6 சதவீதம் முதல் 7 சதவீத பங்களிப்பை அளிக்கிறது.