இந்தியா

நடிகர் திலீப்குமார் நலமாக உள்ளார்: அமிதாப் பச்சன்

செய்திப்பிரிவு

பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் திலீப்குமார் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

'திலீப் குமார் பூரண நலத்துடன் இருக்கிறார்' என தனது ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் தகவல் பகிர்ந்துள்ளார்.

திலீப் குமார் மறைந்துவிட்டதாக நேற்று வதந்திகள் பரவின, இதனையடுத்து அமிதாப் பச்சன் இந்த நிலைத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நடந்த நடிகர் சல்மான் கானின் சகோதரி திருமண விழாவில் திலீப் குமாரும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திலீப் குமாருக்கு தற்போது வயது 91.

SCROLL FOR NEXT