இந்தியா

மகன் புறக்கணிப்பதாக ஆத்திரம்: மருமகளை கொன்ற பெண் கைது

பிடிஐ

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஷீதா அக்பரலி (56). இவரது மகன் மக்தும். மருமகள் சல்மா (24). சமீபத்தில் இத்தம்பதிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை கவனித்துக் கொள்ள சல்மாவின் தாய் ஷமீம், மும்பை குர்லா பகுதியில் இருந்து தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் சமீப காலமாக ரஷீதா தனது மகன் தன்னை புறக்கணிப்பதாகவும் மருமகளிடம் அதிக அக்கறை காட்டுவதாகவும் விரக்தி அடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஷீதா தனது மருமகள் சல்மா, அவரது தாயார் ஷமீம் ஆகியோருக்கு உணவில் தூக்க மருந்து கலந்து கொடுத்தார். இதை சாப்பிட்டதும் இருவரும் அயர்ந்து தூங்கினர். இதையடுத்து சல்மா, ஷமீம் ஆகியோரை ரஷீதா கூர்மையான ஆயுதத்தால் தாக்கியும் கத்தியால் தொண்டை மற்றும் காதுகளை அறுத்தும் கொலை செய்தார். பின்னர் அவர் மும்ப்ரா காவல் நிலையம் சென்று சரண் அடைந்தார்.

SCROLL FOR NEXT