பிஹாரில் அவுரங்காபாத் வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையின்போது கோப்ரா பிரிவு கமாண்டர்கள் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நக்சல்கள் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்களை பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் தொலைபேசியில் கேட்டறிந்தார் ராஜ்நாத் சிங்.
அப்போது, பிஹார் மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
நக்சல்களுக்கு எதிரான சண்டையில் வீர மரணமடைந்த கமாண்டர்கள் குடும்பத்தாருக்கு ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.