இந்தியா

சுனந்தா மரணம்: குற்றப் பிரிவு போலீஸுக்கு விசாரணை மாற்றம்

செய்திப்பிரிவு

மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பான வழக்கு டெல்லி காவல் துறையின் குற்றப் பிரிவுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா இறந்து கிடந்தார். அவரது மரணத்துக்கு அதிக அளவில் மருந்து உட்கொண்டதே காரணம் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதுதொடர்பாக சுனந்தாவின் சகோதரர், மகன், கணவர் சசி தரூர் மற்றும் அவரது ஊழியர் உள்ளிட்டோரிடம் மண்டல துணை மாஜிஸ்திரேட் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை காவல் துறையிடம் வழங்கிய மாஜிஸ்திரேட் இதுகுறித்து விசாரிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.

SCROLL FOR NEXT