டெல்லி, கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தனது பாஸ்போர்ட்டை புதுப் பிக்கக் கோரி, ஆர்.கே.புரம் அலு வலகத்தில் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தாயுடன் விவாகரத்து பெற்று, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற தந்தையின் பெயரைக் குறிப்பிடாததால் விண்ணப்பத்தை நிராகரித்த தோடு, தற்போதுள்ள பாஸ் போர்ட்டையும் அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர்.
ஆஸ்திரேலிய பல்கலையில் முதுநிலை பட்டம் படிக்கும் அந்த இளைஞர் விடுமுறைக்காக டெல்லி வந்திருந்தார், மீண்டும் பல்கலைக்குச் செல்ல முடியா மல் பாஸ்போர்ட் ரத்து செய்யப் பட்டதால், இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி சஞ்சீவ் சச்தேவா முன் னிலையில் இவ்வழக்கு விசா ரணை நடந்தது. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது குறித்து, பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் ஆஜரான அதிகாரி நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கும்போது,
‘தந்தை பெயர் இல்லாத விண்ணப்பங்களை மென்பொருள் ஏற்காது, தாமாகவே விண்ணப்பம் ரத்தாகும். பெற்றோர் சட்டப்படி தங்களின் குழந்தை மீதான உரிமையை மறுத்தால் மட்டுமே விவாகரத்து காரணத்தை ஏற்க முடியும்’ என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சஞ்சிவ் சத்தேவா, ‘மனுதாரர் சார்பில் ஏற்கெனவே 2003-ம் ஆண்டு விண்ணப்பித்து பெறப்பட்ட பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் இல்லை. புதுப் பிக்கக் கோரும் விண்ணப்பத்தில் தந்தை பெயர் இல்லாததைப் பரிசீலிக்கும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்பட வேண்டும்.
கடவுச் சீட்டை பொறுத்தவரை, தந்தை பெயரை கட்டாயம் கோர வேண்டிய அவசியம் சட்டப்படி இல்லை. எனவே, தந்தை பெயரை கேட்டு நிர்பந்திக்காமல், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும். தட்கலில் மனுதாரர் விண்ணப்பித்ததால், அவருக்கு 3 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.