திருமலைக்கு ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்த அனந்த பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி யினரின் 9 மாத ஆண் குழந் தையை அபகரித்துச் சென்றவர் கள் குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என திருப்பதி நகர எஸ்.பி விஜயராவ் நேற்று அறிவித்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மனைவி, 9 மாத ஆண் குழந்தை சென்ன கேசவா ஆகி யோருடன் கடந்த 15-ம் தேதி திருமலைக்கு வந்தார். இவர் களுக்கு தங்கும் விடுதி கிடைக் காததால் ஏழுமலையான் கோயி லுக்கு முன்பு வளாகத்தில் இரவு தூங்கினார்.
மறுநாள் காலை பார்த்தபோது குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடிய பின்னர் இது குறித்து திருமலை போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் திருமலையில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் ஒரு ஆணும், பெண்ணும் அந்தக் குழந்தையை அபகரித்துச் செல்வது பதிவாகி இருந்தது. ஆனால் இந்தக் காட்சிகள் தெளிவாக இல்லை. பின்னர் கம்ப்யூட்டர் நிபுணர்கள் மூலம் அபகரித்துச் சென்ற நபரின் தெளிவான புகைப்படத்தை நேற்று போலீஸார் வெளியிட்டனர். மேலும் குழந்தை குறித்தோ அல்லது அந்த மர்ம நபர் குறித்தோ தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக திருப்பதி எஸ்.பி விஜயராவ் நேற்று அறிவித்தார்.