மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எதிர்காலத்தில் குடியரசுத் தலைவர் ஆவார் என்று ராஜஸ் தானை சேர்ந்த ஜோதிகர் கணித்து கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா அருகேயுள்ள கரோய் கிராமத்தைச் சேர்ந்த பண்டிட் நதுலால் வியாஸ் பிரபல ஜோதிடர் ஆவார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவரிடம்தான் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஜோதிடம் கேட்டு வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் இரானி போட்டியிட்டபோது அவர் மத்திய அமைச்சர் ஆவார் என்று நதுலால் வியாஸ் கணித்து கூறினார். தேர்தலில் இரானி தோல்வியைத் தழுவியபோதும் அவர் மத்திய அமைச்சரானார்.
இதைத் தொடர்ந்து அண் மையில் ஸ்மிருதி இரானி தனது கணவர் ஜுபின் இரானியுடன் சேர்ந்து ஜோதிடரை சந்தித்துப் பேசினார்.
அப்போது, எதிர் காலத்தில் ஸ்மிருதி இரானி குடியரசுத் தலைவர் ஆவார் என்று நதுலால் வியாஸ் கூறியுள்ளார். இந்தத் தகவல் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப் பாக பேசப்படுகிறது.