இந்தியா

மோடிக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்: மன்மோகன்

செய்திப்பிரிவு

பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு எதிராக, தேர்தலில் அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடு திரும்பும்போது, விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, அவசரச் சட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, “தாம் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும், தாம் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில், ராகுல் காந்தியை நாளைச் சந்தித்து விரிவாகப் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அவர் கூறும்போது, தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்கொள்வதற்கு, அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT