அக்.29-ஆம் தேதி முதல் காரைக்கால் - மும்பை இடையே வாராந்திர ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலை 9.45 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் (செவ்வாய்கிழமை) மாலை 5.25 மணிக்கு, மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறு மார்க்கத்தில், மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து பிரதி சனிக்கிழமை பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.45மணிக்கு காரைக்கால் வந்தடையும் என தெற்கு ரயில்வே செஇதிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.