ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் பிசிசிஐ- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர், என்.ஸ்ரீநிவாசன் இன்று நேரில் ஆஜரானார்.
ஆந்திராவில் ஜெகன்மோகனின் நிறுவனத்தில் என்.ஸ்ரீநிவாசன் முதலீடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்,ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் ஆஜராகியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு உள்ளது.
இந்த வழக்கில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி, ஜெகன்மோகன் ரெட்டி, என்.ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கு எதிராக சிபிஐ தரப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் படி என்.ஸ்ரீநிவாசன் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.