மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
மூத்த பத்திரிகையாளரும் ஊடகவியலாளருமான எம்.ஜே. அக்பர் பாரதிய ஜனதா கட்சியில் இன்று (சனிக்கிழமை) இணைந்தார்.
பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்த தேசம் தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் அனைவருக்கும் தெரியும். நாட்டை மீட்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அதனை செய்ய எதிர் நோக்கியே பாஜகவில் இணைந்துள்ளேன். என்னால் முடிந்த பணிகளை சேய்வேன்” என்றார்.
இது குறித்து பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், “விளையாட்டு,சினிமா,இலக்கியம் போன்ற பல்வேறு துறையை சார்ந்தவர்கள் பாஜகவில் உழைக்கும் நோக்கத்துடன் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் ஊடகவியலாளரான என்.ஜே. அக்பரின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது” என்று கூறினார்.