இந்தியா

ஜலந்தர்: மதச் சடங்கு தீயில் தந்தையால் தவறவிடப்பட்ட சிறுவனுக்கு காயம்

ஏஎஃப்பி

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மதச் சடங்கின்போது நெருப்பில் தனது 6 வயது மகனை தந்தை ஒருவர் தவறவிட்டதால் பலத்த தீக் காயங்களுடன் அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மா மாரியம்மா கோயிலில் தீ மிதி திருவிழாவில் கலந்து கொள்ள 600-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் தனது மகனை (கார்த்திக்- 6 வயது) கையில் ஏந்தியபடி குழியில் இறங்கினார். அப்போது திடீரென அவர் கீழே விழ கையில் இருந்த சிறுவனும் நெருப்பு கங்கின் மீது விழுந்தார். உடனடியாக சுற்றியிருந்தவர்கள் இருவரையும் மீட்டனர். இருப்பினும் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

சிறுவனின் கை, கால், முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதேபோல், தந்தைக்கும் 15% தீக்காயம் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே கோயிலில் பெண் ஒருவர் குழந்தையுடன் தவறி விழுந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT