காஷ்மீரில் கெரான் செக்டாரில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ராணுவ தளபதி விக்ரம் சிங் தெரிவிதுள்ளார்.
கடந்த 24ம் தேதியன்று காஷ்மீரில் கெரான் பகுதி வழியாக இந்தியாவுக்குள் 30 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களது முயற்சியை ராணுவம் முறியடித்தது.
ஆனால் தீவிரவாதிகள் அங்கேயே முகாமிட்டு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து 15வது நாளாக எல்லையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ராணுவ தளபதி விக்ரம் சிங் தெரிவிதுள்ளார்.