மாநிலங்களவைத் தேர்தல் களில், பாஜக தரப்பில் போட்டியிடுபவர்கள் சொந்த மாநிலத்தை தவிர்த்து, வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் மாநிலங்களவை எம்.பி.க்களாக பல்வேறு மத்திய அமைச்சர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த மாநிலங்களைத் தவிர்த்து, வேறு மாநில ஒதுக்கீடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் மத்திய அமைச்சர் களாகப் பொறுப்பேற்பவர்களின் பின்வாசலாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி மாறிவிட்டதே இதற்குக் காரணம்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஜவடேகர் மத்தியப்பிர தேசத்தில் இருந்தும், தமிழகத் தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் ஆந்திராவில் இருந்தும், டெல்லி யைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி குஜராத்தில் இருந்தும் மாநிலங்களவைக்குத் தேர்வாகி யுள்ளனர். சமீபத்தில் இராணுவ அமைச்சராக பொறுப் பேற்றுள்ள கோவாவைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர் உத்தரப்பிர தேசம் சார்பில் மாநிலங்கள வைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார்., மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஹரியாணாவிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக் கப்படவுள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் மாநிலங்களவை அதிகாரிகள் கூறும்போது, ‘பல ஆண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட மாநிலம் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பி னர்கள் அந்த மாநிலத்தில் குடியிருப்பவர்களாக இருப்பது கட்டாயமாக இருந்தது. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால், ஒருவர் வெளி மாநிலத்திலிருந்தும் மாநிலங் களவை உறுப்பினராக தேர்வாக முடியும் என சட்டதிருத்தம் செய்தது’ என்றனர்.
பாஜகவுக்கு பெரும்பான்மை
தற்போது மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில் காங்கிரஸுக்கு 68 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவுக்கு 43 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. அடுத்த இரு வருடங்களில் மாநிலங்களவையில் 86 உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகின்றன. அந்த இடங்களை பாஜக கைப்பற்று வதற்கு, ஹரியாணா, மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்களில் அக்கட்சிக்குக் கிடைத்த வெற்றி உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.