இந்தியா

பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்

செய்திப்பிரிவு

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட் டிருப்பது தொடர்பாக பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது: குல்பூஷண் ஜாதவ் ரா உளவுத் துறையைச் சேர்ந்தவர் இல்லை. அவருக்கு சட்டஉதவிகள் வழங்க இந்திய தூதரகம் சார்பில் அவரைச் சந்திக்க முறைப்படி விண்ணப்பம் அளித்தோம். ஆனால் அதனைப் பாகிஸ்தான் அரசு நிராகரித்துவிட்டது.

அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. போலியான ஆதாரங்கள் மூலம் அவரை குற்றவாளியாக சித்தரித்துள்ளனர். அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றினால் அது திட்டமிட்ட படுகொலையாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT