இந்தியா

தொடரும் பலாத்கார சம்பவங்கள்: பெங்களூரில் பாஜக கண்டனப் பேரணி - முதல்வர் வீட்டை முற்றுகையிட முயற்சி

இரா.வினோத்

கர்நாடகத்தில் தொடர்ந்து நடை பெற்றுவரும் பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க தவறிய மாநில அரசை கண்டித்து, பாஜக வினர் கண்டனப் பேரணி நடத் தினர். முதல்வர் சித்தராமையா வீட்டை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கணக்கான பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் பள்ளி சிறுமி களுக்கும், பெண்களுக்கும் எதிரான‌ பாலியல் வன்கொடுமை கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 10-வயதுக்கும் குறை வான சிறுமிகள் தாங்கள் படிக்கும் பள்ளி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக் கப்படும் சம்பவங்கள் பொது மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

முற்றுகை முயற்சி

கர்நாடகத்தில் தொடரும் பாலியல் பலாத்கார சம்பவங் களைத் தடுக்க தவறிய அரசை கண்டித்து பாஜகவினர் புதன்கிழமை பெங்களூரில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தேசிய துணைத் தலைவர் எடியூரப்பா தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் அமைச்சர்கள் ஷோபா கரந்தலாஜே, அசோக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள கர்நாடக பாஜக அலுவகத்தின் அருகே தொடங்கி முதல்வர் சித்தராமையாவின் ‘காவிரி' இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

சித்தராமையாவின் வீட்டை பாஜகவினர் நெருங்கிய போது, போலீஸார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் சாலையில் அமர்ந்து, கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், சித்தராமையாவுக்கு எதிராகவும் ஆவேசமான முழக்கங்களை எழுப்பினர். போலீஸாரின் கட்டுப் பாட்டையும் மீறி, சித்தராமை யாவின் வீட்டை நெருங்க முயன்ற பாஜகவினர் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். அதனைத் தொடர்ந்து எடியூரப்பா உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

தூக்கில் போடுங்கள்

இதனைத் தொடர்ந்து எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசும்போது,‘‘கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு விட்டது. குற்றவாளிகளை கைது செய்யாமல், அரசு அவர் களை காப்பாற்றி வருகிறது.பள்ளி சிறுமிகள் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல் பட்டு வருகிறது.

சித்தராமையா மிகவும் மந்தமாக செயல்பட்டு வருகிறார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முதல்வரும்,சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பெங்களூரு பள்ளிகளில் நடந்து வரும் பலாத்காரங்களை தடுக்க தவறிவிட்டனர்.

சிறுமிகளை பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கைது செய்து தூக்கில் போடுங்கள். அதுவரை பாஜகவின் போராட்டம் ஓயாது'' என்றார்.

SCROLL FOR NEXT