1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்துக்கு, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மேலும் 14 நாட்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே 18 மாதங்கள் சிறையில் இருந்ததால் எஞ்சிய 42 மாத சிறை தண்டனையை மும்பை ஏர்வாடா சிறையில் அவர் அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தன்னை பரோலில் விடக்கோரி கடந்த அக்.1ல் மனு செய்தார். இதனைத் தொடர்ந்து 14 நாட்களுக்கு விடுவிக்கப்பட்டார்.
இன்றுடன் பரோல் முடிந்துவிட்டதால், மேலும் இரு வாரங்களுக்கு (14 நாட்களுக்கு) பரோலை நீட்டிக்குமாறு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து சஞ்சய் தத்துக்கு மேலும் 14 நாட்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.