இந்தியா

மேற்கு வங்கத்தில் சிங்குர் நிலம் உரியவர்களிடம் ஒப்படைப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

பிடிஐ

மேற்குவங்க மாநிலம் சிங்குரில் டாடா ஆலைக்காக கையகப் படுத்திய நிலங்கள் விவசாயி களிடம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி நடைபெற்றது. அப்போது நானோ கார் ஆலைக்காக சிங்குரில் 997.11 ஏக்கர் நிலம் டாடா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அப் போது எதிர்க்கட்சியாக இருந்த திரிணமுல் காங்கிரஸும் போராட் டத்தில் குதித்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் நிலங்களை விவ சாயிகளுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி உத்தரவிட்டது. இதை யடுத்து இரு தினங்களுக்கு முன் நிருபர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, புதன் கிழமை அன்று விவசாயிகளுக்கு நிலம் திருப்பி அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில் நேற்று விவசாயிகளுக்கு நிலங்களைத் திருப்பி அளிப்பதற்கான ஆவணங் கள் ஒப்படைக்கப்பட்டன. மேலும், இதைப் பெற மறுத்த விவசாயி களுக்கு நஷ்ட ஈடு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா, ‘‘கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். இதுதான் எங்களது மிகப் பெரிய வெற்றி’’ என்றார். மேலும் டாடா போன்ற நிறுவனங்கள் மேற்குவங்கத்தில் தொழில் தொடங்க முன் வந்தால் மிட்னாபூரில் 1,000 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரப்படும் என்றும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT