இந்தியா

மன்மோகன் சிங் குறித்த பேச்சு: பிரதமர் பதவியின் மாண்பை குலைத்துவிட்டார் - மோடி பற்றி ராகுல் காந்தி விமர்சனம்

பிடிஐ

பிரதமர் பதவியின் மாண்பை நரேந்திர மோடி குலைத்து விட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

மாநிலங்களவையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசும் போது, “தன்னைச் சுற்றிலும் ஊழல் நடந்தபோதும், கறை படியாதவராக மன்மோகன் இருந்தார். மழைக் கோட்டுடன் குளிக்கும் வித்தை அவருக்கு மட்டுமே தெரியும்” என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த காங் கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட் டத்தில் நேற்று பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசும்போது, “பிரதமர் பதவி சாதாரண பதவி அல்ல. கவுரவம் மிகுந்த பதவி. மன்மோகன் சிங் குறித்த விமர்சனம் மூலம் அதன் மாண்பை மோடி குலைத்துவிட்டார்” என்றார்.

ராகுல் மேலும் பேசும்போது, “பிரதமர் மோடி தனது இரண்டரை ஆண்டு கால சாதனைகளைப் பட்டியல் இடவேண்டும். தன்னைச் சுற்றியுள்ள 50 தொழிலதிபர்களுக்கு உதவியது மற்றும் பண மதிப்பு நீக்கத்தால் நாட்டு மக்களை வரிசை யில் நிற்க வைத்ததை தவிர வேறு எதையும் அவர் செய்யவில்லை.

வெளிநாடுகளில் பதுக்கப்பட் டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்து, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்ற மோடியின் வாக்குறுதி என்ன ஆனது?” என கேள்வி எழுப்பினார்.

SCROLL FOR NEXT