கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் களுக்கு எதிரான கலவரம் தொடர் பான வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர், ஆயுதத் தரகர் அபிஷேக் வர்மா ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “டைட்லர், வர்மா ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 4 மணிக்கு நீதி மன்றத்தில் ஆஜராகி சிபிஐ கோரிக்கை மீது தங்கள் நிலைப் பாட்டை தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
1984-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் 3 சீக்கியர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக டைட்லருக்கு எதிரான வழக்கில் அவருக்கு 3 முறை சிபிஐ நற்சான்று வழங்கியது. என்றாலும் வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.