மத்திய பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோகர் பரிக்கர், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து போட்டியிட அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனோகர் பரிக்கர், கோவா முதல்வராக இருந்தார். அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டதையடுத்து அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
நேற்று, அவர் கேபினட் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
தற்போது எம்.பி.யாக இல்லாத அவர் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக வேண்டும். இதனையடுத்து, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனோகர் பரிக்கர் மனு தாக்கல் செய்துள்ளார்.