இந்தியா

மத வன்முறை தடுப்பு மசோதா: பிரதமருக்கு மோடி கடிதம்

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத வன்முறை தடுப்பு மசோதாவை குளிர் கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டுவதில் சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டு நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார்.

அக் கடிதத்தில், மத வன்முறை தடுப்பு மசோதாவை முன் மொழியும் முன்னர் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடனும் இது குறித்து விரிவாக ஆலோசிக்க வேண்டும் இல்லையென்றால் இந்த மசோதா எதற்காக தாக்கல் செய்யப்படுகிறதோ அதற்கு எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.

மேலும், மத வன்முறை தடுப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசு பட்டியலில் உள்ள விஷயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றுவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் கருத்து:

இது தொடர்பாக, மோடி தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில்: "அரசியல் ஆதாயங்களுக்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவுமே மத வன்முறை தடுப்பு மசோதா குளிர் கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படுகிறது , இதில் உண்மையான அக்கறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதில்:

இந்நிலையில், மோடியின் கருத்துக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், விரிவான விவாதத்திற்குப் பிறகே மத வன்முறை தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளார்.

SCROLL FOR NEXT