இந்தியா

டெல்லியிலிருந்து மும்பைக்கு 12 மணி நேரத்தில் சென்றடைந்தது: டால்கோ அதிவிரைவு ரயில் சோதனை வெற்றி

ஐஏஎன்எஸ்

சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட டால்கோ ரயில், நேற்று அதிகாலை 2.34 மணிக்கு மும்பை ரயில் நிலையத்தை அடைந்தது. திட்டமிட்ட பயண நேரத்துக்கு 2 நிமிடங்கள் முன்னதாக, 11 மணி 42 நிமிடங்களில் டால்கோ ரயில் மும்பையை அடைந்தது.

டெல்லி மும்பை இடையிலான தொலைவு, 1,400 கிமீ. இத்தடத்தில் தற்போது அதிகபட்ச வேகத்தில் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், டெல்லியில் இருந்து மும்பையை சென்றடைய, 16 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. ஆனால், டால்கோ ரயிலில், பயண நேரம், 4 மணிக்கு மேல் குறைகிறது.

மிகவும் எடை குறைவான 9 பெட்டிகள் கொண்ட இந்த அதிவிரைவு டால்கோ ரயில், ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப் பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் மும்பைக்கு இறக்குமதியானது. மணிக்கு 200 கிமீ வரை வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில், உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி-மொராதாபாத் இடையே முதல்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர், பால்வால்-மதுரா இடையே சோதனை ஓட்டம் நடந்தது.

இதைத் தொடர்ந்து இறுதிக் கட்ட சோதனையாக நேற்று டெல்லி-மும்பை இடையே இயக்கப்பட்டது. சோதனை ஓட்டத் தின் மூலம் தொகுக்கப்பட்ட தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில் டால்கோ ரயில் களை முழுவீச்சில் பயன்படுத்து வதற்கான கொள்முதல் நடவடிக் கைகளை ரயில்வே துறை மேற் கொள்ளும்.

SCROLL FOR NEXT