இந்தியா

திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்த அதிமுக எம்பி: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

செய்திப்பிரிவு

டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி சிவாவை அதிமுக எம்பி சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் வார விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு, மீண்டும் டெல்லி செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று சனிக்கிழமை என்பதால் திமுக எம்பி திருச்சி சிவாவும், அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் சொந்த ஊர் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே திடீ ரென வாய்தகராறு ஏற்பட்டதாக வும், இதனால் ஆவேசமடைந்த சசிகால புஷ்பா, திருச்சி சிவாவின் கன்னத்தில் 4 முறை அறைந்ததாகவும் ஏஎன்ஐ செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் அதிர்ச்சி

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு கட்சி எம்பிக்களும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய மறுத்து, வார்த்தை போரிலும் ஈடுபட்டுள்ளனர். வெகுநேரம் நீடித்த இந்த மோதலால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து தரக்குறைவான வார்த்தைகளில் திருச்சி சிவா பேசியதால் தான், சசிகலா புஷ்பா அவரை கன்னத் தில் அறைந்ததாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT