இந்தியா

வானிலை முன்னறிவிப்பு: 24 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும்

செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் தென் மேற்கு பகுதியில் நிலைக் கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இது புயலாக மாறுமா இல்லையா என்பது 2 நாட்களுக்கு பிறகுதான் தெரியவரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.

இதனால், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் குறிப்பாக கடலோர பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஆங்காங்கே கன மழை பெய்யலாம். தமிழகம் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த கடல் காற்று 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT