இந்தியா

நாட்டிலேயே முதல்முறையாக மத்திய பிரதேசத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்க தனி அமைச்சகம்

செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போபா லில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வழக்கமாக, ஒரு மாநிலத்தின் செழிப்புக்கு, பொருளாதார வளர்ச் சியை மட்டுமே அளவுகோலாக கருதமுடியாது. எனவே, மக்களின் மகிழ்ச்சிக்கான புதிய துறையை உருவாக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்தது. உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகாதாரம் போன்றவை மனித வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளாகும்.

இவற்றைத் தாண்டி மக்களின் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைய உள்ளன. வாழ்க்கை மீதான பிடிப்பு, திருப்தி நிலை போன்ற பல அம்சங்கள் உள்ளன. இவை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மக்களின் மகிழ்ச்சி நிலையை அதிகப்படுத்துவதற்காக, பல்வேறு துறைகளுடன் இணைந்து, புதிய கொள்கைகளையும், கோட்பாடு களையும், இப்புதியத் துறை ஏற் படுத்தும். இதைச் சார்ந்து, பல் வேறு ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் போன்றவை மேற் கொள்ள இத்துறைக்கு ரூ.3.80 கோடி ஒதுக்கீடு செய்ய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT