இந்தியா

உலகத்தை இணைப்பதில் யோகா பெரிய பங்காற்றியுள்ளது: பிரதமர் மோடி

பிடிஐ

லக்னோவில் ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் மிகப்பெரிய கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். 3-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அங்கு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் யோகாவுக்கு உள்ள பங்கு கலாச்சார, மொழித் தடைகளைத் தாண்டி உலகை இணைப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது என்றார் மோடி.

மரபான இந்த யோகாப் பயிற்சி தற்போது அனைவரது வாழ்க்கையிலும் தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது என்பதை பெருமிதத்துடன் குறிப்ப்பிட்டார்.

“நம் மொழி, நம் மரபு, பண்பாடு அறியாத நாடுகள் கூட யோகா மூலம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளது. யோகப் பயிற்சி உடல், மனம், ஆன்மாவை இணைப்பது போலவே உலகை இணைப்பதிலும் பெரும்பக்கு வகிக்கிறது.

முந்தைய காலங்களில் யோகா என்பது இமாலயத்தில் இருந்த ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் மட்டுமாக இருந்தது. இப்போது ஒவ்வொரு மனிதரிடத்திலும் தினசரி பயிற்சியாக மாறியுள்ளது.

24 மணிநேரமும் யோகா செய்ய வேண்டியதில்லை. 50 அல்லது 60 நிமிடங்கள் போதுமானது. ஏனெனில் அது உடல், மனம், புத்தி ஆகியவற்றுக்கு ஒத்திசைவை அளிக்கிறது. இந்தியாவின் 125 கோடி மக்கள் மற்றும் உலகின் பிற பகுதிகளில் வாழும் மக்களும் யோகா மூலம் நல்லுணர்வை அடைய முடியும் எனில் மனித குலமே அதன் எண்ணங்கள் தோற்றுவிக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

உணவுக்கு உப்பு எப்படி வெறும் ருசி மட்டுமல்லாது உடலின் நல்லுணர்வுக்கு ஆதாரமாக உள்ளதோ, வாழ்க்கைக்கு யோகா நமக்கு உள்ளது.

யோகா என்பது ஆரோக்கியத்துக்கான உறுதியை வழங்குகிறது. இதனைப் பயிற்சி செய்ய அதிக செலவும் ஆவதில்லை. அனைவரும் யோகக்கலையை தங்கள் வாழ்க்கையின் ஒருபகுதியாக மாற்றி கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

கடந்த 3 ஆண்டுகளில் நிறைய யோகா பயிற்சி மையங்கள் நாடு முழுதும் தோன்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் பிரதமர் மோடி.

SCROLL FOR NEXT