இந்தியா

ஜோத்பூரில் குடியிருப்பு பகுதியில் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

பிடிஐ

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே குடியிருப்புப் பகுதியில் மிக்-27 ரக போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.

இதில் சீமா ஹிங்கோனியா என்பவரின் வீட்டின் ஒரு பாதி சேதமடைந்தது. இந்த விபத்தில், பைலட் உயிர்தப்பினார்.

இச்சம்பவம் குறித்து ஜோத்பூர் விமானப்படை வட்டாரம் கூறும்போது, "வழக்கமான பயிற்சியில் இருந்த அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

அவசரமாக தரையிறங்க விமானி அனுமதி கோரினார். ஆனால் அதற்குள் இன்ஜின் செயலிழந்ததால் விமானம் கட்டுப்பாட்டில் இருந்து விலகியது. இதையடுத்து விமானி விமானத்திலிருந்து விடுபடும் சூழல் ஏற்பட்டது.

விமானத் தளத்துக்கு அருகில் இருந்து குடியிருப்புப் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சீமா ஹிங்கோனியா என்பவரின் வீட்டின் ஒரு பாதி சேதமடைந்தது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT