இந்தியா

நடப்பாண்டில் 100 தீவிரவாதிகள் ஊடுருவல்

செய்திப்பிரிவு

கடந்த 1947-ம் ஆண்டு இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு-காஷ்மீர் பகுதியை ஆக்கிர மிக்க பாகிஸ்தான் பழங்குடியினத் தலைவர்கள் முயற்சி செய்தனர். அவர்கள் குல்மார்க், போனியார், பாரமுல்லா பகுதியாக காஷ்மீருக்குள் நுழைய முயற்சி செய்தனர். அதனை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.

அந்த பாதைகள் வழியாக தீவிரவாதிகள் தற்போது இந்தியா வுக்குள் ஊடுருவி வருவதாகவும் நடப்பாண்டில் மட்டும் இதுவரை 100 தீவிரவாதிகள் ஊடுருவியிருப் பதாக உளவுத் துறை தெரிவித் துள்ளது.

காஷ்மீரின் பட்காம் மாவட்டம் நேகம் வட்டத்தில் பாகர்போரா கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள புனிதத் தலத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி மக்களோடு மக்க ளாக தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர். எனவே தீவிரவாதி களை கண்டறிவது கடினமாக உள்ளது என்று ராணுவ வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT