இந்தியா

கர்நாடகாவில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்: சாதிவாரியாக பதவி கேட்கும் எம்எல்ஏக்கள்

செய்திப்பிரிவு

கர்நாடக உள்துறை அமைச்ச ராக இருந்த பரமேஷ்வரின் பதவி விலகல், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த‌ அம்பரீஷின் பதவி பறிப்பு, மைசூரு மாவட்ட அமைச்சர் மகாதேவ பிரசாத்தின் மரணம் என அம்மாநில‌ அமைச் சரவையில் 3 காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற இருப்பதால் கூடுதலாக 2 புதிய துறைகளையும் உருவாக்க முதல்வர் சித்தராமையா திட்ட மிட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த எம்எல்ஏக் கள் அமைச்சரவையில் இடம் பிடிக்க காய்களை நகர்த்தி வரு கின்றனர். ஏற்கெனவே அமைச் சராக இருந்த‌ மோட்டம்மா, ஆர்.பி.திம்மாபுரா பி.எம்.நரேந்திர சாமி, சிவராஜ் தங்கடகி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களின் ஆதரவை நாடியுள்ளனர்.

இதனிடையே லிங்காயத்து, குருபா ஆகிய சாதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஷட்சகிரி, ராமதுர்கா, ஹெச்.எம்.ரேவண்ணா, சி.எஸ்.சிவள்ளி ஆகியோர் தங்கள் சாதிக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்குமாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனால் க‌ர்நாடகாவில் பெரும்பான்மையாக உள்ள தலித் சமூகத்தினர் தங்கள் தரப்பு எம்எல்ஏக்களான மோட்டம்மா, பி.எம். நரேந்திர சாமி மற்றும் சிவராஜ் தங்கடகி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே தற்போது அமைச்சர்களாக உள்ள ஆர்.வி.தேஷ்பாண்டே, கே.ஜே.ஜார்ஜ், ரோஷன்பெய்க், எச்.சி.மகா தேவப்பா ஆகியோர் தங்களுக்கு உள்துறை அமைச்சர் பதவியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை விரிவாக்கத்தை சித்தராமையா திட்டமிட்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே அமைச்சரவையில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவுவதால் முதல்வருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலிட தலைவர்களுடன் ஆலோ சிப்பதற்காக சித்தராமையா இன்னும் சில தினங்களில் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இன்னும் சில தினங்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய் யப்படும். காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மேலிட தலைவர்களின் ஒப்புதலுடன் பொறுப்புகள் வழங்கப்படும். அமைச்சரவை விரிவாக்கத்தில் எவ்வித நெருக்கடியும் இல்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT