இந்தியா

திருமலையில் அபிதேயக அபிஷேக உற்சவம்: முத்து அங்கி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி பவனி

செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிதேயக அபிஷேகத்தையொட்டி, நேற்று உற்சவரான மலையப்ப சுவாமி, முத்து அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் அபிதேயக அபிஷேக உற்சவம் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. முதல் நாள் அன்று உற்சவரான மலையப்ப சுவாமி வைர கவசத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தார். 2-ம் நாளான நேற்று முத்து அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சவரை வழிபட்டனர். நிறைவு நாளான இன்று தங்க கவசத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT