இந்தியா

அமர்நாத் குகைக் கோயிலில் 500 யாத்ரீகர்கள் தரிசனம்

பிடிஐ

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் நேற்று 500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.

தெற்கு காஷ்மீரில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க யாத்ரீகர்கள் ஜம்முவில் இருந்து பயணம் செய்வார்கள். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம், கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பல்தால் அடிவார முகாம்களில் இருந்து முறையே 46 மற்றும் 14 கி.மீ. பயணம் செய்து கோயிலை அடைய முடியும்.

இந்நிலையில் காஷ்மீரில் நிகழாண்டு யாத்திரை ஜம்மு வில் நேற்று முன்தினம் தொடங் கியது. ஜம்முவில் இருந்து பஹல்காம் மற்றும் பல்தால் அடிவார முகாம்களை அடைந்த யாத்ரீகர்கள் நேற்று காலை அங் கிருந்து குகைக் கோயிலை நோக்கி பயணத்தை தொடங்கினர்.

நேற்று மாலையில் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதுவரை 500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள் ளனர். பஹல்காம், பல்தால் ஆகிய இரு வழிகளிலும் பாதுகாப்பு பணியில் மாநில போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு ராணுவம் மற்றும் இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படையினர் உதவி வருகின்றனர்” என்றார்.

இந்நிலையில் 2,481 யாத்ரீகர் கள் கொண்ட 2-வது குழு நேற்று 66 வாகனங்களில் ஜம்முவில் இருந்து இரு அடிவார முகாம் களை நோக்கி புறப்பட்டது.

இதனிடையே குகைக் கோயிலுக்கு அருகில் நேற்று முன்தினம் இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படை அதிகாரி ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

கடந்த ஆண்டு 48 நாட்கள் நடந்த அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு 40 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு யாத் திரைக்கு 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ள னர். இந்த ஆண்டு 35 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீரர்களைப் பாதுகாப்பு பணியில் அரசு ஈடுபடுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT