‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தை போதித்தவர் ஸ்ரீ ராமானுஜர்’’ என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் யோகி நாராயணா மடத்தைச் சேர்ந்த 1,500 பேர் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதிக்கு நேற்று பாதை யாத்திரையாக வந்தனர். ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண் வெங்கடேஸ்வரரை தரசினம் செய்துவிட்டு, அங்குள்ள ஸ்ரீ ராமானுஜரின் திருமேனி சிலைக்கு பூஜைகள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் பங்கேற்றார். அவர், ‘‘வைண வர்களின் முன்னோடியாக விளங் கியவர் ராமானுஜர். யாராக இருந் தாலும் முழு நம்பிக்கையோடு பக்தி செலுத்தினால் இறைவனுடன் நெருக்கமாக முடியும் என்ற சமத்துவத்தை போதித்து அனைத்து தரப்பினரையும் பக்தி மார்க்கத்துக்கு அழைத்துச் சென்றவர்’’ என ஸ்ரீ ராமானுஜரின் புகழ் பாடினார்.