இந்தியா

நடிகர் ஆமிர்கானுக்கு தீனாநாத் மங்கேஷ்கர் விருது: ஆர்எஸ்எஸ் தலைவர் வழங்கினார்

செய்திப்பிரிவு

பொதுநிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களில் பங்கேற்பதை 16 ஆண்டுகளாக தவிர்த்து வந்த பாலிவுட் நடிகர் ஆமிர்கான், பாடகி லதா மங்கேஷ்கர் அழைப்பின்பேரில் தீனநாத் மங்கேஷ்கர் விருது விழாவில் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினரான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் இருந்து சிறப்பு விருதையும் அவர் பெற்றுக் கொண்டார்.

திரைப்பட பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர், தனது கணவரான மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கரின் 75-வது நினைவுதினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு கடந்த திங்கள்கிழமை விருதுகள் வழங்கினார்.

இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்காற்றியதற்காக முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கும் இவ் விழாவில் விருது வழங்கப்பட்டது. இதேபோல் பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா பாலிக்கு தீனாநாத் விசேஷ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT