இந்தியா

மகாராஷ்டிராவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்

பிடிஐ

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மசோதா, மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை யின் நேற்றைய ஒருநாள் சிறப்பு கூட்டத்தொடரின் போது, மாநில நிதியமைச்சர் சுதிர் முங்கான்திவார் ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்தார்.

மொத்தம், 288 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக மற்றும் சிவசேனா சார்பில் 185 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ், ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. காங்கிரஸ் உறுப்பினர்களும், ஜிஎஸ்டி மசோதா தங்களால் உருவானது என சொந்தம் கொண்டாடினர். இதனால், சிறிய விவாதத்துக்குப் பின் மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

மகாராஷ்டிராவைச் சேர்த்து இதுவரை, 10 மாநிலங்கள் ஜிஎஸ்டி மசோதாவை நிறை வேற்றியுள்ளன. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட ஜிஎஸ்டி மசோதா சட்டமாக வேண்டுமெனில், 15 மாநிலங்கள் இதனை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT