இந்தியா

காஷ்மீரில் லஷ்கர் முக்கிய தீவிரவாதி கைது

பிடிஐ

வடக்கு காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் உயர்நிலை கமாண்டர் ஒருவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.

குப்வாரா மாவட்டம், சோகாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லஷ்கர் அமைப்பின் உயர் கமாண்டர் அபு உகாஷா என்கிற ஹன்சுல்லாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பிறகு இவர் அளித்த தகவ லின் பேரில், வனப் பகுதியில் பதுங்கியிருந்த அபு பக்கர் என்ற மற்றொரு லஷ்கர் தீவிரவாதியை யும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT