‘‘ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய ரகசிய ஆவணங்களை, பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனத் திடம் ஒப்படைக்க வேண்டும். ஸ்கார்பீன் பற்றிய ரகசியங்களை மேலும் வெளியிட கூடாது’’ என்று ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகைக்கு நியூ சவுத்வேல்ஸ் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கப்பற்படைக்கு அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க, பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறு வனத்துடன் மத்திய அரசு 3.5 பில்லியன் தொகையில் ஒப்பந்தம் செய் துள்ளது. அதன்படி, மும்பையில் உள்ள நிறுவனத்தில் பிரான்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி யுடன் முதலில் ஒரு ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்காக வடிவமைக்கப்பட்டு வரும் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய ரகசியங்களை, ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை வெளி யிட்டது. சுமார் 22,400 பக்கங்களில் ஸ்கார்பீன் பற்றிய பெரும்பாலான முக்கிய தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. ரகசியங்கள் எங்கிருந்து கசிந்தன என்பதில் சர்ச்சை நீடிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா வின் நியூ சவுத்வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில், டிசிஎன்எஸ் நிறு வனம் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், மேற்கொண்டு ஸ்கார்பீன் ரகசியங்களை வெளி யிட கூடாது என்று கடந்த திங்கட் கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கின் விசா ரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, ‘‘வெளியில் கசியவிடப் பட்ட ஸ்கார்பீன் ரகசியங்கள் தொடர் பான ஆவணங்கள் அனைத்தையும் டிசிஎன்எஸ் நிறுவனத்திடம் ஆஸ்திரேலியன் பத்திரிகை ஒப்படைக்க வேண்டும்’’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து டிசிஎன்எஸ் தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
ஸ்கார்பீன் தொடர்பான ரகசியங் களை ஆஸ்திரேலியன் பத்திரிகை இனிமேல் வெளியிடக் கூடாது என்று கடந்த திங்கட்கிழமை பிறப் பித்த உத்தரவை, ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப் படுத்தியது. அத்துடன், ஸ்கார்பீன் ரகசியங்கள் தொடர்பான ஆவணங் களை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எங்கள் நிறுவனம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
முதல் உத்தரவு பிறப்பித்த உடனேயே, ஸ்கார்பீன் தொடர்பான தகவல்களை ஆஸ்திரேலியன் பத்திரிகை தனது இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டது.
இவ்வாறு டிசிஎன்எஸ் நிறுவனம் கூறியுள்ளது.
‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை யில் ஸ்கார்பீன் ரகசியங்களை வெளி யிட்ட செய்தியாளர் கேமரான் ஸ்டூவர்ட் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய இ மெயி லில், ‘‘நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்கார்பீன் ஆவணங்களை டிசிஎன்எஸ் நிறுவனத்திடம் ஒப் படைப்போம்’’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், பாரிஸில் உள்ள நீதிமன்றத்தில் ஸ்கார்பீன் ரகசியங்கள் கசிந்தது குறித்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது டிசிஎன்எஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.