இந்தியா

வயரில் தீப்பிடித்ததே நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கு காரணம்

செய்திப்பிரிவு

இரு கடற்படை அதிகாரிகள் பலி கொண்ட ஐஎன்எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதற்கு வயரில் தீப்பிடித்தது தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்த மான இந்த நீர்மூழ்கிக் கப்பல் பிப்ரவரி 26-ம் தேதி மும்பை கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. அப்போது கப்பலில் புகை பரவியது.

இதில் இரு கடற்படை அதிகாரிகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். 7 வீரர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். இது தொடர்பாக கடற்படை தரப்பில் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக கப்பலில் இருந்த வயரில் தீப்பிடித்ததுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்த விபத்துடன் சேர்ந்து கடந்த 7 மாதங்களில் கடற்படை கப்பல்கள் 10 முறை விபத்துக் குள்ளாகியுள்ளன.

இதற்கு பொறுப்பேற்று கடற்படை தலைமை தளபதி டி.கே. ஜோஷி பதவி விலகினார் என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT