சாரதா நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சாரதா நிதி நிறுவன மோசடி குறித்த விசாரணை அடுத்தக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் மோசடி தொடர்பாக இந்த வழக்கில் தொடர்புடைய பல முக்கிய பிரமுகர்கள் சிக்கி உள்ள நிலையில், ஒடிசா, கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நான்கு இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ நேற்று (திங்கட்கிழமை) சமர்பித்தது. இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ரஜாத் மஜும்தர் சீட்டு மோசடி பணத்தின் மூலம் ஆதாயம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே சோதனை நடத்தப்படும் நபர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.