இந்தியா

பாக்.கில் நடக்கும் சார்க் மாநாட்டில் அருண் ஜேட்லி பங்கேற்பாரா?: மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்

பிடிஐ

பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்பது குறித்து இதுவரை முடிவு செய் யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் நேற்று கூறியதாவது:

வரும் 25, 26-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமா பாதில் சார்க் நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விடுத்த அழைப்பை வெளியுறவு செயலாளர் ஜெய் சங்கர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் எல்லை தாண்டிய தீவிர வாதம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவை குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று பாகிஸ்தானிடம் தெளிவுபடுத்தி விட்டோம். இனிமேல் பாகிஸ்தான் அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்மையில் இஸ்லாமாபாத் தில் சார்க் உள்துறை அமைச்சர் கள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவமதிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு செயல்பட்டது.

எனவே சார்க் நிதியமைச்சர்கள் மாநாட்டில் அருண் ஜேட்லி பங் கேற்கமாட்டார் என்று டெல்லி வட்டாரங்கள் ஏற்கெனவே தெரி வித்துள்ளன.

விகாஷ் ஸ்வரூப்

SCROLL FOR NEXT