பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய பெண் ஒருவர் சுடப்பட்டு இறந்தார்.
இதுகுறித்து ஜம்முவில் நேற்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, “ஜம்மு பிராந்தியத்தின் சாக்பக்வாரி என்ற இடத்தில் சர்வ தேச எல்லைப் பகுதியில் ராணுவச் சாவடி உள்ளது. இதற்கு அருகில் பெண் ஒருவர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றார்.
எல்லை பாதுகாப்பு படையினர் அவரை எச்சரித்து விரட்ட முயன் றார். ஆனால் அப்பெண் இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறினர். இதையடுத்து ஊடுருவலை முறியடிப்பதற்காக பிஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அப்பெண் உயிரிழந்தார்” என்றார்.