திருப்பதியை அடுத்துள்ள லட்சுமி புரம், எர்ரகுட்டா வனப்பகுதி யில் நேற்று காலையில் செம்மரம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து திருப்பதி அதிரடிப்படை ரிசர்வ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இவர்களைக் கண்டதும் 15-க்கும் மேற் பட்டோர் செம்மரங்களை போட்டு விட்டு தப்பியோடினர். இவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டம், மகனூர் பட்டி பகுதியை சேர்ந்த முருகன், பாஷா ஆகிய இருவரை அதிரடிப்படையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் இருந்து 9 செம்மரங்களைக் கைப்பற்றினர்.
தப்பி ஓடிய கடத்தல் கும்பலைப் பிடிக்க வனப் பகுதிகளில் தீவிர சோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அதிரடிப் படை போலீஸார் தெரிவித்தனர்.