கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் பாதுகாவலர் சலீம் ராஜ், கொச்சி அருகே ஒரு ஏக்கர் நிலம், திருவனந்தபுரம் அருகே 15 ஏக்கர் நிலத்தை அபகரித் துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவற்றின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.200 கோடியாகும். இதுதொடர்பாக நிலத்தின் உரிமை யாளர்கள் ஏ.கே.ஷரீபா, பிரேம்சந்த் நாயர் ஆகியோர் உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி ஹரூன்-உல்-ரஷீத் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில் அவர் கூறியிருப்பதாவது:
நிலஅபகரிப்பு தொடர்பான இரு வழக்குகளிலும் வருவாய்த் துறையின் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே மாநில போலீஸார் இந்த வழக்குகளின் விசாரணையை நேர்மையாக நடத்துவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
ஆகையால் இரு வழக்கு களையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தர விடுகிறேன். இவற்றின் விசார ணையை ஒன்பது மாதங்களுக்குள் சிபிஐ முடிக்க வேண்டும்.
மாநில முதல்வரின் அலுவலகம் மற்ற துறைகள், மாநிலத்துக்கு முன்னோடியாக இருக்க வேண் டும். முதல்வரின் பாதுகாவலர் மீது இதுபோன்ற நிலஅபகரிப்பு புகார்கள் எழுந்துள்ளன. அவரை தனது பாதுகாவலராக நியமித்தது குறித்து முதல்வர் உம்மன் சாண்டி மாநில மக்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளார் என்று நீதிபதி தெரிவித்தார். நிலஅபகரிப்பு வழக்கு கள் மட்டுமல்லாமல் ஒரு தம்பதி யரை கடத்திய வழக்கிலும் சலீம் ராஜா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.